பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ?

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேமிக்கலாம் 
Read More

புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது !


விடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும். அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் மீது உள்ள தடையை தாம் நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று காலை 11.00 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 22 நாடுகளிலும் இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனி விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கவோ இல்லை, விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யவே ஐரோப்பிய நாடுகளுக்கு உரிமை இல்லை. அத்தோடு விடுதலைப் புலிகளின் கொடியை பாவிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிய உள்ளது. இருப்பினும் தற்போது அது இணைந்துள்ள காரணத்தால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும். எனவே இன்று முதல் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு தடை இல்லை. அத்தோடு தமிழர்கள் இனி மாவீரர் தினத்தை நேரடியாக கொண்டாட முடியும். புலிகளை இதுவரை காலமும் பயங்கரவாதிகள் என்று கூறிவந்த நபர்கள் இனி அந்த சொல்லை பாவிக்க முடியாது. அது போக , இனி ஐரோப்பிய நாடுகள் எங்கேயும் புலிகளின் கொடி உயரப் பறக்கலாம் !
Read More

ஜூலியின் மூக்கை உடைத்த விஜய் டிவி: அந்த 5 நொடி வீடியோ இதுதான்

ஓவியா அப்படி சொன்னாக்கா, அதுக்கு முன்னால ஒரு 5 நொடிக்கு முன்னால அவ சொன்னாக்கா, என்று கதறி அழுது வழக்கம்போல் தனது பொய் நாடகத்தை அரங்கேற்றியவர் ஜூலி என்பது அனைவரும் அறிந்ததே. ஓவியா குற்றமற்றவர், அவர் யாரையும் புறம் கூறவில்லை என்பதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னரும் ஜூலி வேண்டுமென்றே அந்த வீடியோ இருக்குது என்று கூறி அனைவரையும் கடுப்பாக்கினார்.
Read More

உலக முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் ???

துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான் தனது வளைகுடா சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா வந்தார் சவுதி அரேபியா தலைவர்களை சந்தித்த அவர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, அல் அக்ஸா பள்ளியில் இஸ்றேல் நடத்தி வரும் அடாவடி தனம் பற்றி கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதில் அழித்த அவர், அல்அக்ஸா பள்ளி உலக முஸ்லிம்களின் புனி தலம் என்றும் இந்த புனித தலத்தின் விசயத்தில் இஸ்றேல் கட்டவிழ்த்துவிடும் அடாவடி தனங்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் நீண்ட நாள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் இஸ்றேலை எச்சரித்தார்
Read More

அரசியல் தீர்வு பாதிக்கப்படலாம்! – விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது என வட மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை நேற்று தமது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது. மாறாக பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். பொருளாதார ரீதியில் சில விடயங்களை பெற்று விட்டால் அரசியல் தீர்வுகளை பெற முடியாமல் போவதற்கு இடமுண்டு. எனவே இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் குறிப்பிடுவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதில் வழங்கியுள்ளார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்டம் அம்பலம்

Big boss vijay tv show  மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ?  இதன் பிண்ணனி  என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்ள இங்கே 
Read More

ஆண்மைக்குறைபாட்டை குணப்பபடுத்த

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மைக் குறைபாடு பிரச்சினையில் சிக்கித்தவிக்கின்றனர். எனினும் ஆண்மைக்குறைபாட்டை எளிய முறையில் குணப்படுத்த முடியும்

அதிகமாக தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மைக்குறைவு ஏற்படும். தேவையில்லாத மாத்திரைகளை தவிர்ப்பதன்மூலம் ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

மது அருந்துவதன் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும்.எனவே மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் புகைப்பழக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவு ஏற்படும்.புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.
Read More

உருளைக்கிழங்கு செடி மீது தக்காளி ஓட்டுதல்

உருளைக்கிழங்கு செடி மீது தக்காளி ஓட்டுதல் இந்த ஒட்டு முறை 100 % வெற்றிகரமாக அமைந்தது
Read More

பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார். எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது. இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது…
Read More

தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு ஓவியர் சந்தானம் அவர்களின் மறைவு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தூரிகையாளர், மாந்தநேயமிக்கவர் என பன்முகங்களைக் கொண்ட ஓவியர் வீரசந்தானம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ் உணர்வாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று மாலை (13-07-2017)திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார் என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் நாடுபோற்றும் தலைசிறந்த ஓவியப் படைப்பாளர். கண்ணைக் கவரும் கலைநயம் சிந்தும் கருத்தாழம் மிக்க கோட்டோவிங்களைப் படைப்பதில் வல்லவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடியவர். விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தமிழ்த்தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்றவர். உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர். விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்" அனைத்துப் போராட்டக் களங்களிலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். சிங்கள இனவெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் பேரவலத்தைச் சித்தரிக்கும் 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்னும் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அவருடைய இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
Read More

சர்வ மத பிராத்தனை கிஸ்தவர்களுக்கு உகந்ததா ?

சர்வ மத பிராத்தனை கிஸ்தவர்களுக்கு உகந்ததா ?
Read More

குழந்தை பெற்றோரே டிசைன் செய்து கொள்ளலாம்

அடுத்த 30 ஆண்டுகளில் குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை வழக்கொழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக உள்ளவர் ஹாங்க் கிரேலி.

இவர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தம்பதிகள் தங்கள் டிஎன்ஏ-வை வைத்து ஆய்வகங்களில் கருவை வடிவமைக்கும் முறை இன்னும் முப்பது ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி விடும் என்றார்.

பெண்ணின்
தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் என்றும், அதன்மூலமாக இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம் எனவும், பின் அந்த முட்டைகள் மூலமாக ஆணின் ஸ்டெம் செல்களை சேர்த்து குழந்தையை உருவாக்கலாம் என்றும் கிரேலி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தாங்களே டிசைன் செய்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த முறை தற்போதே சாத்தியம் என்று கூறிய அவர், இன்னும் 30 ஆண்டுகளில் இந்த முறையை மிகவும் குறைந்த விலையில், உயர்ரக தொழில்நுட்பத்தில் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் குழந்தைக்காக உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் கிரேலி தெரிவித்துள்ளார்.
Read More

அன்ரோயிட் கைப்பேசிகளில் 3 சிம்கள் பயன்படுத்தலாம்!

தற்போது இரண்டு சிம்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இருந்தும் இரண்டினை விட கூடிய சிம் கார்ட்டினை பாவிப்பவர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட கைப்பேசிகளை வைத்திருப்பார்கள்.இவர்களது பிரச்சினைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடப்ரர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும்.

எனினும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பிலும் விலை தொடர்பிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
Read More

ஐரோப்பா வாழ் பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்
Read More

ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10)
...கர்த்தர், மனிதனை இந்த பூமியிலே சிருஷ்டிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரமாயிரமாயிருந்தது. அவர்கள் நம்மைப்போல மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்களல்ல. தேவனுடைய ஜோதிப் பிரகாசத்திலிருந்து, அதாவது அழியாத மகிமையுள்ளவர்களாக, சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆனால் தேவன், தேவதூதர்களுக்கு வந்த பெருமை மனிதனுக்குள்ளும் வந்துவிடாதபடி, தள்ளப்பட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை யாக மனுஷனை மண்ணிலிருந்து, உண்டாக்கினார்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும், அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).
மட்டுமல்ல, யார் யார் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார் களோ, அவர்களுக்கு தேவதூதர்களையெல்லாம் பணிவிடை ஆவிகளாகத் (வேலைக்காரர்களாக) தந்தருளுகிறார் (எபி. 1:14). அதன்படி நம்மை தேவ தூதர்களுக்கு மேலாக உயர்த்திவிட்டார். தேவதூதர்கள், நமக்குக் கொடுக்கப்படுகிற பணிவிடை ஆவிகள். மறுபடியும் பிறந்தவர்கள் ஏழைகளாயிருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களை யாரும் அற்பமாய் எண்ணிவிட முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், கர்த்தர் தேவ தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் பரலோகத்திலே தேவனை தரிசித்து, அவர்களுக்காக, உத்தரவாதம் செய்கிறார்கள்.
ஒரு ஐசுவரியவான் வீட்டு வாசலருகே, லாசரு என்ற மனிதன், நாய்க்குக் கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல், தவித்தான். ஆனாலும் அவன் மரித்தபோது, தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் ஐசுவரியவானோ, பாவியாயிருந்தபடியால், அவனுக்கு ஆபிரகாமின் மடியும் கிடைக்கவில்லை. தேவதூதரின் பணியும் கிடைக்கவில்லை. இதனால் வேதம் சொல்லுகிறது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபி. 13:2).
இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும், ஒரு தேவதூதன் உண்டு. உங்கள் ஊழியத்துக்கு ஏற்ற விதத்திலே, நூற்றுக்கு அதிபதியைப்போல, நூறு தேவ தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ, கர்த்தர் தருவதுண்டு. தேவபிள்ளைகளை பாதுகாக்கிற சாதாரண ஊழியம் செய்கிற தேவதூதர்கள், எப்பொழுதும் பிதாவின் முகத்தை பரலோகத்தில் தரிசிப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், உன்னதமான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறதான, தேவபிள்ளைகள், எவ்வளவு சமீபமாக பிதாவினுடைய முகத்தை தரிசிப்பார்கள்!
இந்த உலகத்தில் நீங்கள், எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக தேவனாகிய கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அதைப் போலவே, பரலோகத்திலும் அவருடைய முகத்தை மிக அருகிலே தரிசிப்பீர்கள். ஆகவே, தேவனுடைய இருதயத்துக்கு, மிகவும் நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுங்கள்.
http://appamonline.com/2016/11/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Share: 
Read More

அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்

அண்மையில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளும் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையும் ஓந்துள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்ட அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் அது தொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில்.

மக்களுக்கு நன்றி



எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.

முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.

மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.

நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.

ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.

ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.

இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின. நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன். உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
Read More

சீமானை ஊடகங்களில் காட்டாதீர்

 சீமானை ஊடகங்களில் காட்டாதீர் .சீமான் ஒரு இன வெறியன்
Read More

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும் தேசத்தில் நடக்கும் திடுக்கிடும்  உண்மை இனி நடக்கபோவது என்ன இதன் பிண்ணனி  என்ன ?
Read More

தமிழர்கள் தான் உலகின் மூத்த குடி

அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வு என்பது தனியான சமாசாரம். ஆரியக் குடியிருப்பு நடந்ததற்கு இருநூறு ஆண்டுகளாக ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அப்படி எதுவும் நடக்கவில்லை, ஆரியர்கள் என்பவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகள்தான் என்று விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டன. முன்பு மொழியியல் அல்லது அகழ்வாய்வு ஆதாரங்கள் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இப்போது காலம் மாறி விட்டது. மனிதர்களின் டிஎன்ஏ எனப்படும் மரபணுவை வைத்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.

இதில் சமீபத்தில் ஒரு மாபெரும் ஆய்வுக் கட்டுரை BMC Evolutionary Biology எனும் அறிவியல் இதழில் பதிப்பிக்கப் பட்டிருகிறது.

வழக்கமாக ஆய்வின் போது X குரோமோசோம் எனப்படும் பெண்களின் டிஎன்ஏவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

இப்போதைய ஆய்வில் Y குரோமோசோம் எனப்படும் ஆண்களின் டிஎன்ஏவை வைத்து ஆய்வு நடத்தப் பட்டிருகிறது.

மத்திய ஐரோப்பா, வளைகுடா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 17,000 ஆண்களை வைத்து 32 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு இது.

இதில் பூர்வ குடிகளின் டிஎன்ஏவை R1a என்று தனிமைப் படுத்தி இருக்கிறார்கள். இது இந்தியாவில் 17.5 சதவிகிதம் ஆண்களிடம் பெரும்பான்மையாக கிடைக்கிறது.

அதிலும் தமிழத்தில் மிகுதியாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தவிர மீதி ஆண்களிடம் சில பல குறைபாடுகளோடு இருக்கிறது. அதாவது இனக் கலப்பு நடந்திருக்கிறது.

இன்றைய நவீன ஆய்வுகள் சந்தேகமற ஆரியக் குடியிருப்பு நடந்திருப்பதை உறுதி படுத்துகின்றன. அந்தக் குடியிருப்பு இந்தியாவில் மாபெரும் கலாச்சார மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
Read More

ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!

நீங்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட நபர். எங்கள் நாட்டுக்குள் நீங்கள் செல்ல அனுமதியில்லை மலேசியாவில் இறங்கியதும் விமான நிலையத்தில் வைகோவைப் பார்த்து அந்த அதிகாரி சொன்னார்.

உரிய அனுமதிகள், பரிசோதனைகள், எடுத்துத்தான் மலேசியா செல்வதற்கு அவருக்கு விசா அளிக்கப்பட்டது என்பதால், வைகோ திடுக்கிட்டார்.

நான் முறையான அனுமதி பெற்றுத்தான் வருகிறேன் என ஆவணங்களைக் காட்டுகிறார்.

நீங்கள் இலங்கை குடிமகன்தானே? இது அடுத்த கேள்வி. இல்லை, நான் இந்தியக் குடியுரிமை பெற்றவன். தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்கிறார்.

நீங்கள் எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்தவர்தானே? நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல. அந்த அமைப்பின் ஆதரவாளன்!

அது தடை செய்யப்பட்ட அமைப்புதானே? அதைப் பற்றி இந்த இடத்தில் உங்களிடம் நான் விளக்கம் அளிக்கவோ, விவாதம் செய்யவோ தயாராக இல்லை. சூடாகிறார் வைகோ.

அதிகாரிகள், உங்களை நாட்டுக்குள் அனுப்ப முடியாது எனச் சொல்லி, ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு நாற்காலியில் உட்காருகிறார் வைகோ. மலேசியாவில் இப்படி வைகோவுக்கு நடப்பது இரண்டாவது முறை.

வைகோவும் மலேசியாவின் பினாங்கு மாகாணத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் இணைந்து பினாங்கில் இரண்டு மாநாடுகள் நடத்தினர்.

ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசு மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு உலகம் முழுக்க நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உலக நாடுகளின் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன.

இது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், வைகோவை எந்த நாட்டுக்கும் போகவிடாமல் செய்யும் வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது.

1989-ம் வருடம் ஈழம் சென்று பிரபாகரனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார் வைகோ. அப்போது பிரபாகரனும் வைகோவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை வைகோ அணிந்து இருப்பது போல படங்களும் எடுக்கப்பட்டன. அதை ஆதாரமாகக்காட்டி, ‘வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்’ என்று சொல்லியிருக்கிறதாம் இலங்கை.

இதை வைத்துத்தான் அவர் மலேசியா வுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.2015-லும் மலேசியாவுக்குள் நுழைய விசா தராமல் இழுத்தடித்தார்கள்.

ஆனால், மலேசிய துணைப் பிரதமர் வரை விஷயத்தைக் கொண்டுச் சென்று அனுமதி வாங்கினார்கள். பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, குலசேகரன் எம்.பி ஆகியோர் அதற்கு முயற்சி எடுத்தார்கள்.

அப்போது மலேசிய எம்.பி-க்கள் மத்தியிலும் வைகோ நீண்ட நேரம் பேசினார். அது இலங்கை அரசாங்கத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இம்முறை எப்படியும் உள்ளே விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 9-ம் தேதி அதிகாலை தனிச்செயலர் அருணகிரியுடன் சென்னையிலிருந்து கிளம்பி, மலேசியக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினார்.

அன்று இரவே திருப்பி அனுப்பப்பட்டார். சாப்பிடக்கூட அவரை அனுமதிக்கவில்லை. அருணகிரி மூலமாக வைகோ உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.

கடுப்பான வைகோ அப்படி ஒன்றும் நான் சாப்பிடத் தேவையில்லை எனச் சொல்லி விட்டார். தண்ணீர் மட்டும் வாங்கி குடித்தார்.

மாலையில் இந்தியத் தூதரக அதிகாரி திருமூர்த்தி, வைகோவைத் தொடர்பு கொண்டு, சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? எனக் கேட்டுள்ளார்.

அதையும் கனிவாக மறுத்து விட்டார். 16 மணி நேரம் கழித்து, சென்னையில் வீட்டுக்கு வந்து தான் சாப்பிட்டார்.

இனி வைகோவின் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் சாத்தியம் இல்லை என்றே சொல்கிறார்கள்.

2011 ஜூனில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற வளாகத்தில் இனப் படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அப்போதும் இப்படித்தான் நடந்தது.

தொடர்ச்சியாக வைகோவுக்கு தடைவிதிக்கும் வெவ்வேறு நாடுகளின் முடிவுக்குப் பின்னால் இருப்பது இலங்கைதான்.

இது வைகோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதிக்கும் செயல் எனப் பொங்குகிறார்கள், புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள்.

தடையை உடைத்து வைகோவை மலேசியாவுக்குள் அழைத்து வருவேன்’ என்று திருமண விழாவில் சொல்லியிருக்கிறார் ராமசாமி.

ஈழம் என்றாலே தடைதான். போராட்டம்தான்!

- Vikatan
Read More

Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?



மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளமே Windows Phone ஆகும்.

எனினும் இவ் இயங்குதளமானது ஏனைய மொபைல் இயங்குதளங்களைப் போன்று பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மற்றுமொரு சேவையான ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் இச் செயற்பாடானது நிரந்தரமானதாகும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஒருபோதும் Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் பாவனையில் உள்ளது. எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. இதற்கு வருந்துகின்றோம் என தெரிவித்துள்ளது.Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?
Read More

தொடர்ந்து போராடுவோம் … புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி

தோழர்களுக்கு வணக்கம்,

தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்) நால்வர் மீதும் ஏவிய குண்டர் சட்டத்தை கண்டித்தும் எதிர்வினையாற்றிய தோழர்கள் அனைவருக்கும் எங்களது புரட்சிகர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

’தமிழ், தமிழர், தமிழீழம், தமிழ்நாடு’, என்று நமது தேசிய இனத்திற்கான உரிமைகளை பேசுபவர்களை முடக்கவும், சிறைப்படுத்தவும் வெறி பிடித்த மிருகமாய் பாஜக களமிறங்கியிருக்கிறது. ஏனெனில் இந்த முழக்கங்களை முடக்கினால் மட்டுமே “இந்து”, “இந்துத்துவம்” என்ற பாசிச கருத்தியலை தமிழ்நாட்டில் வளர்த்து எடுக்க இயலும் என்று பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்புகிறது. ஏனெனில் ’தமிழர்கள் இந்துக்கள் அல்ல’ என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நன்கு அறியும். ஆகவே தமிழன் எனும் அடையாளத்தை அழித்துவிட்டு ‘இந்து’ எனும் அடையாளத்தை நம்மீது திணிக்கிறது. இந்திய அளவில் இந்த வன்முறைக் கூட்டத்தை உறுதியுடன் எதிர்கொள்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

பெரியார், அம்பேத்கர் மற்றும் ‘ தேசியத் தலைவர்’ பிரபாகரன் ஆகியோரின் அர்ப்பணிப்பும், அறிவும், அரசியலும், நம்மை இந்த வன்முறைக் கும்பலின் கருத்தியலை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் செய்யக்கூடியவர்களாக மாற்றியிருக்கிறது.
இனிவரும் காலத்தில் இந்தக் கும்பலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும். இந்த போராட்டத்தில் தோழமை ஆற்றல்களாக நாம் அனைவரும் கைகோர்த்து களம் காண்போம். எங்கள் மீது பாய்ந்திருக்கும் இந்த அரச அடக்குமுறை எங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது, உறுதிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் மீதான பற்றுறுதியை மெருகேற்றியிருக்கிறது. இவர்களை வெல்லக்கூடிய வலிமையான வீரர்களாக நாம் அனைவரும் மாறி இருக்கிறோம்.

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது, சமரசமற்றது, தவிர்க்க இயலாதது. இந்த போராட்டத்தின் 2000 வருட வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். அசுர பலத்துடன் வெறிப் பிடித்த மிருகமாய் நம்மைக் குதற காத்திருக்கும் இந்த கூட்டத்தை வேட்டையாடும் பொறுப்பை வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய வாய்ப்புகள் வரலாற்றில் அரிதாகவே வரும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த அரச அடக்குமுறை மிகத் தீவிரமானதோ, கடினமானதோ அல்ல. நம்முடைய உறுதியின் முன் இது புறக்கணிக்கக்கூடிய, எளிதில் வென்று கடந்து விடக்கூடிய அடக்குமுறையே. எங்களைவிட பல மடங்கு அதீத அடக்குமுறைகளை எதிர்கொண்டு நமக்கான போராட்டத் தளங்களை அமைத்துக் கொடுத்த போராளிகள் பலர் நம் சமகாலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து நமக்கு கிடைத்த அரசியல் பாடங்கள் வழிகாட்டுதலை மேற்கொண்டு போராட்டத்தை மேலும், மேலும் தீவிரமாக்க சபதமேற்போம்.
நினைவேந்தல் என்பது ஒரு சடங்கல்ல. இனப்படுகொலையை வழி, வழியாக நினைவுப்படுத்துவதும், அந்த பேரழிவின் நினைவுகளை அரசியலாக்கி நம்மை கூர்மைப்படுத்துவதற்குமான ஒரு பண்பாட்டு நிகழ்வு. தமிழர் கடலோரத்தில், முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலையை மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்தி இந்நிகழ்விற்கான நீதியை வென்றெடுக்க நம்மை நாமே தயார் செய்து கொள்ளும் நிகழ்வு. இந்நிகழ்வை வன்முறையாக, அடக்குமுறையை ஏவி பாஜக வும், அதன் பினாமி தமிழக அரசும் முடக்கிவிட முனைகிறது. இந்த தமிழின விரோத நிகழ்வினை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இனி தமிழகமெங்கும் நினைவேந்தல் நிகழ்வினை நாம் துவங்க வேண்டும். தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் வாழும் தமிழர்கள் ‘ஏன் தங்கள் தொப்புள் கொடி’ உறவுகளான ஈழத்தமிழர்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை உணரச் செய்ய வேண்டும்.

தமிழீழப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு கிடைத்த இந்தியாவின் ஒத்துழைப்பே இதுநாள் வரையில் இலங்கை தண்டிக்கப்படாமல் தப்பிப்பதற்கான காரணமாகும். நம்மிடம் வாங்கிய வோட்டுகளை வைத்து, பாராளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியில் ஒப்புதல் எதையும் பெறாமல் ‘ஆரிய இனவெறி’, ‘ பிராந்திய ஆதிக்க நலன்’, ‘ பொருளாதார- ரானுவ நலன்’ ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சனநாயக விரோதமாக இந்திய அரசு செய்த நடவடிக்கைகளை சக மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்குண்டு. நேற்று ஈழத்தில் அக்கிரமங்களைச் செய்த இந்திய அரசு, நாளை நம் மீதும் இதே அநீதிகளை அரங்கேற்றும். எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது அனைத்து சனநாயக சக்திகளின் போராட்டமே. இதை நாம் வென்றாக வேண்டும். எனவே இந்த அடக்குமுறைகளை கடந்து நாம் நமது போராட்டக் களத்தினை வலுப்படுத்துவோம்.

கடந்த 21ம் தேது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று அரச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த தோழர். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), தோழர். மல்லை சத்யா, சுப்ரமணியன், அந்தரிதாஸ் (மதிமுக), ஓவியர் வீரசந்தானம், தோழர். மகேஸ் (மக்கள் மன்றம், காஞ்சி), தோழர். அரங்க குணசேகரன், தோழர். பொழிலன், தோழர். கி.வே. பொன்னையன் (தமிழக மக்கள் முன்னனி), இயக்குனர் தோழர். கெளதமன், வழக்கறிஞர்கள் தோழர். கயல், திருமலை, தோழர். நாகை திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி), தோழர். தபசி (திராவிடர் விடுதலை கழகம்) , வழக்கறிஞர் தோழர் பாவேந்தன் ஆகியோருக்கும்,
தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் என 17 தோழர்களை கடந்த மே 21ம் தேதி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்த தோழர். ஜவாஹிருல்லா, தோழர். சீமான், தோழர். ஜீ. ராமகிருஷ்ணன் (சி பி எம்), தோழர். முத்தரசன் தோழர். தெஹ்லான் பார்கவி, தோழர். ரவிக்குமார் மற்றும் அய்யா. பழ. நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும்,

24ந் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்த மதிமுக துணை பொதுச் செயலாளர் தோழர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வேணுகோபால், SDPI கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் தோழர் கரீம், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் அரங்க குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் குமரன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, தமிழர் விடியல் கட்சியின் மாநில மாணவரணி பொறுப்பாளர் தோழர் நவீன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, இயக்குனர் .வ .கௌதமன் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், பூவுலகின் நண்பர் தோழர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தின் தோழர் SP பாலகிருஷ்ணன், புத்தர் கலைக்குழு தோழர் மணிமாறன் தோழர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

குண்டர் சட்டம் ஏவப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்த அனைவரின் சனநாயக மறுப்புக்கு எதிரான பதிவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். (குண்டர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து இயக்கங்கள், கட்சிகள், கலைஞர்கள், இயக்குநர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பெயர்கள் இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10213129062724723 )
புழல் சிறையில் சிறைப்பட்ட தோழர்களை நேரிடையாக சந்தித்து ஆதரவும், உற்சாகமும் தெரிவித்து, தோழர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தும், சிறை மீண்டவுடன் இந்த அடக்குமுறையைக் கண்டித்து ஆதரவளித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், மே 21ந் தேதி இரவிலிருந்து தொடர்ச்சியாக காவல்துறை, நீதிபதி சந்திப்பு என அனைத்து நகர்விலும் துணை நின்றதும், அடுத்து வந்த நாட்களில் சிறையில் தோழர்களை சந்தித்து உற்சாகமூட்டிய தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புழல் சிறையில் அன்றாடம் சந்தித்து உரையாடி உற்சாகமும், ஆதரவும் அளித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர். வன்னியரசு மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம். எமக்கு அடுத்த அறையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் விடுதலையடைய வாழ்த்துகிறோம்.
மேலும் கடந்த மே 29ந் தேதி தமிழக அரசு பாஜக அழுத்தத்திற்கு அடிப்பணிந்து என் மீதும் (திருமுருகன்-மே 17 இயக்கம்), டைசன், இளமாறன், அருண் ( தமிழர் விடியல் கட்சி) ஆகியோர் மீதும் அராஜகமான ஒடுக்குமுறையை ஏவி “குண்டர் தடைச் சட்டத்தை” பாய்ச்சியது. இந்த அடக்குமுறையைக் கண்டித்து போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தோழர்கள் அரங்க. குணசேகரன், பொழிலன், கோவை கு. இராமகிருட்டிணன் மற்றும் இதர இயக்கத் தோழர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு சிறையில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அய்யா. வைகோ அவர்களுக்கும், போராட்ட அழைப்பைக் கொடுத்து எதிர்ப்பினை வலுப்படுத்த முயற்சி எடுத்து வரும் தோழர். வேல்முருகன் அவர்களுக்கும், பாஜக வின் பின்னனி அரசியல், தமிழக அரசின் பலவீனமான பினாமி அரசியலை அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜக அரசின் பாசிசத்தை அம்பலப்படுத்தி கண்டனம் வெளியிட்ட தோழர்கள் ஜவாஹிருல்லா(தமுமுக), தெகலான் பார்கவி (எஸ் டி பி ஐ) ஆகியோருக்கும் மற்றும் கண்டன அறிக்கை வெளியிட்டும், தொலைக்காட்சி விவாதத்தில் எதிப்புகளை பதிவும் செய்து பாஜக வை அம்பலப்படுத்திய தோழர். வேல்முருகனுக்கும், தோழர். சீமான் ஆகியோருக்கும் விடுதலை இதழில் அடக்குமுறையை பதிவு செய்து கண்டித்த அய்யா. வீரமணி அவர்களுக்கும் ஜனநாயக உரிமைக்கு ஒற்றைக்குரலில் பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
முக்கியமாக படைப்பாளிகளின் உணர்வினை வெளிப்படுத்தி, அடக்குமுறையைக் கண்டித்த இயக்குனர்கள் அய்யா. பாரதிராஜா, அமீர், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், ராம், பிரம்மா, கமலக்கண்ணன், கெளதமன் ஆகியோருக்கும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர். சுந்தர்ராஜனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறையிலும், நீதிமன்றத்திலும், சந்தித்து ஆதரவளித்த தோழர். வழக்கறிஞர் சுப்ரமணியன் (மதிமுக), வழ. ப. புகழேந்தி (தமிழ் தேச மக்கள் கட்சி), வழ. சுரேஷ், வழ. பாலாஜி (நாம் தமிழர் கட்சி), வழ. சாரநாத் ( விசிக), பாலாஜி (விசிக) மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் வழ. துரைசாமி, தோழர். குமரன், தோழர். மனோஜ் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். SDPI கட்சி வழக்கறிஞர்களை சந்திக்க இயலாமல் போனதற்கு வருத்தங்களை பதிவு செய்கிறோம்.
அதே சமயத்தில் அரசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசை aதனிமைப்படுத்திய இயக்கத் தோழர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், சமூக வலைதள பதிவர்கள் என பாசிச எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் ஆரத் தழுவி உரித்தாக்குகிறோம். தொடர்ந்து செய்திகள், விவாதங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி.
இச்சமயத்தில் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டு சிறையில் எம்முடன் நிற்கும் போர் குணமிக்க தமிழர் விடியல் கட்சியின் மூத்தத் தோழர்கள் டைசன், இளமாறன், அருண் மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தொடர்ந்து போராடுவோம், தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்போம்.

ரேசன் கடை, காவிரி உரிமை, கர்நாடக தாக்குதல், பண மதிப்பிழப்பு, சல்லிகட்டு, நெடுவாசல், கீழடி, மீனவர்கள் கொலை போன்ற தமிழின விரோத பாஜக வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் மே17 இயக்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, முடக்கிவிட முனையும் பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியலையும், ஆரிய இனவெறியை வீழ்த்திடும் பணியை மே 17 இயக்கம் சமரசமின்றி மேற்கொண்டு முன்னேறி செல்லும்.
நாம் வெல்வோம்!!

– திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
புழல் சிறை.
7-6-2017
Read More

பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?

உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன
Read More

பிரான்ஸ் ஜனாதிபதி ஆனது எப்படி ?

கட்சி ஆரமப்பித்து ஒரு வருடத்துக்குள் பிரான்ஸ் ஜனாதிபதி ஆனது எப்படி ?
Read More

டுவிட்டர் அறிமுகம் செய்யவுள்ள ப்ரீமியம் வீடியோ சேவை

பேஸ்புக்கிற்கு அடுத்ததாக சமூக வலைத்தள உலகை ஆக்கிரமித்து நிற்பது டுவிட்டர் ஆகும்.

மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள இத்தளமானது ஆரம்பத்தில் அன்றாக செயற்பாடுகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதன் பின்னர் கடந்த நான்கு வருடங்களாக வீடியோக்களை பகிரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியையும் டுவிட்டர் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது ப்ரீமியம் வீடியோ சேவையையும் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொழுதுபோக்கு அம்சங்கள், செய்திகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றினை தொகுத்து வழங்கும் 200 வரையான நிறுவனங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களின் வீடியோக்களை கட்டணம் செலுத்தி பார்வையிட முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளே டுவிட்டர் நிறுவனம் இதுவரை 450 நிழ்ச்சிகளை சுமார் 800 மணித்தியாலங்கள் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

இவற்றினை 45 மில்லியன் பயனர்கள் கண்டுமகிழ்ந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read More

அதிகம் பயன்படும் மொழி தமிழ்!

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது.

இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது.



இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது.
Read More

உலகை மீண்டும் ஆளக் காத்திருக்கும் தமிழர்கள்

நாளைய தினமே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போகும் என்ற நிலை ஏற்பட்டதோடு, சர்வதேசமே அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கின்றது.போர் அறைகூவல்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட உலகப்போருக்கான சாத்தியம் வலுப்பெற்று, உலக அழிவையும் காட்டிவிடும் ஒரு வகை பீதி கண் முன் நகர்கின்றது.அதேபோல் இந்த உலக யுத்தத்தை பற்றி பல தீர்க்க தரிசனங்கள் கூறப்பட்டுள்ளதால் உலகம் ஒரு வித பதற்றத்திலேயே நாட்களைக் கடத்துகின்றது.இது இவ்வாறு இருக்க, நவீன உலகின் நடைமுறைப் பாதை மறைவாகக் கொடுக்கும் ஓர் செய்தி என்ன வெனின் தமிழர் மீண்டும் உலகை ஆளப்போகின்றார்கள் என்பதே.அழிக்கப்பட்டு, அடக்கப்பட்டு தொடர்ச்சியாக அடிமைப்படுத்த பலராலும் திட்டமிட்டு வரும் ஓர் இனம் எப்படி மீண்டும் உலகை ஆளும் என்பது இப்போதைக்கு வேடிக்கையான விடயமாக இருக்கலாம்.ஆனால் இதற்கான நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றது தமிழரின் எழுச்சி. தமிழர் ஒரு காலத்தில் இந்த உலகை ஆண்டனர் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.இருப்பாய் தமிழா நெருப்பாய்! குட்டக் குட்ட நீ குனிந்தால்குட்டிக் கொண்டேயிருக்கும் இவ்வுலகம் .....என அறிந்ததாலோ என்னவோ இப்போது மீண்டும் ஒன்றுபட்டு விட்டான்.இந்த வரிகளை சாத்தியப் படுத்துகின்றது இன்றைய தமிழரின் ஒன்று கூடல்.சரி அது எப்படி முழு உலகையும் தமிழன் மீண்டும் ஆளுவான் என்று கூறமுடியும். எப்படி சாத்தியம்? என்ற கேள்வியோ? அல்லது சந்தேகமோ வேண்டாம். இதற்கு காரணம் இருக்கின்றது.அதாவது, இப்போதைக்கு வடகொரியாதான் அமெரிக்காவிற்கு எதிரி என்பது வெளிப்படையாக தெரிந்த விடயம். ஆனால் ஒட்டு மொத்த உலகிற்குமே தமிழர்கள் பிரதான எதிரிகள்.சட்டென்று மேலோட்டமாக தெரியாத விடயம் இது. இலங்கை யுத்தத்தை சற்று நிலை நிறுத்திப் பாருங்கள். தமிழர்கள் என்ற காரணத்திற்காக சர்வதேசம் இணைந்து அழித்தொழித்தது. இன்றுவரை அதற்கான தீர்வுகளை கிடைக்காதது வேறு விடயம். ஆனால் உலகில் வேறு எந்த இனத்தையும் சர்வதேசமே திட்டமிட்டு சேர்ந்து அழித்தது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.அதேபோல் குமரிக்கண்டம் முதல், சிந்துவெளிச் சமூக காலம் வரை பல வகையான தமிழர்களின் உண்மையான வரலாறுகள் இதுவரையில் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை.சிந்துவெளி தொல்பொருள் ஆய்வு கூட தொடர்வதற்கு இப்போது கடும் எதிர்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதற்கும் மேல் தமிழர் வரலாறு கூறும் பல நூல்கள் தடை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.அதேபோல் அண்டைநாடு இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்தியாவும் உண்மையான தமிழர் வரலாற்றை பாட ரீதியாகவும் புகட்டுவது இல்லை. தமிழரின் பல உண்மைகள் சாதனைகள் புதைக்கப்பட்டே போயின தமிழர் வரலாற்றில்.அவ்வளவு ஏன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு காரணம் இனக்கலவரம் என்பது சோற்றுக்குள் முழுப் பூசனிப் பொய்.தமிழர்களின் உண்மையான வரலாறு அழிக்கப்பட வேண்டும் என்ற ஓர் இலக்குக்காகவே யாழ். நூலகமும் எரிக்கப்பட்டது.இவ்வாறான பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்கள் விடயம் அந்த அளவு ஆழமானது.இவ்வாறு தொடர்ச்சியாகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் நடந்து கொண்டு வருவது அவதானிக்க கூடிய ஒன்று. ஆனாலும் அவற்றினை நாம் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.தமிழர்களிடையே இப்படியான தொடர் பயணத்தில், போராட்ட களமே வாழ்வாகிப்போன தமிழர்களின் நிலை இன்று வேறுபக்கம் திரும்பி விட்டது. அதாவது ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஓர் புதுப்பயணத்தில் கால் பதித்து உள்ளான்.இதில் உச்சகட்ட வியப்பு யாதெனில் வல்லரசுகளுக்கு எல்லாம் வல்லரசான அமெரிக்காவிற்கு எதிராக தமிழன் போர்கொடிகளைத் தூக்கிவிட்ட நிலை ஏற்பட்டு விட்டது.அமெரிக்காவின் அதிபர் மாறிப்போவார் புது அதிபர் பதவி ஏற்பார் என்பது 500 வருடங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்ட விடயம். இது நம்ப முடியாத உண்மை இதனை சொன்னது நோஸ்ராடாமஸ் எனும் தீர்க்கதரிசி.இது மட்டுமல்ல ஆனால் ஆச்சரியம் மிக்க அவருடைய ஓர் கணிப்பே ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் உலகை ஆண்ட ஓர் இனம் மீண்டும் உலகை ஆளத் தொடங்கும் என்பது.யாரோ எதுவோ சொன்னார்கள் என எடுத்துக் கொள்ள முடியாது என நினைக்க வேண்டாம். இன்றைய நிலையில் இவருடைய தீர்க்க தரிசனங்களால் கதி கலங்கிப் போய் உள்ளது ஒட்டு மொத்த உலக நாடுகளுமே.இவர் சொன்ன பல தீர்க்கங்கள் அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேறி வருகின்ற ஓர் காரணத்தினால் சற்று ஆழச் சிந்திப்பு தேவை இவ்விடயத்தில்.அவர் கூறியதன் படியே இப்போது உலகப்போர் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பது கண் முன்னே தெரிந்து கொண்டு வருகின்றது.மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பது டிரம்ப் என்பது நோஸ்ராடாமஸ் கணிப்பு. அது இப்போது தெளிவாகவே தெரிகின்றது.அதுவும் அணுகுண்டு போரை டிரம்ப் ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் தீர்க்கதரிசி. அதுவும் கூட சாத்தியமான விடயமாகவே இருக்கின்றது.இந்த நிலையிலேயே அதே நொஸ்ராடாமஸின் இன்னோர் கணிப்பில்...,“உலகை ஆண்ட இனம் ஒன்று மீண்டும் உலகை ஆழ நினைக்கும், அதனால், உலக யுத்தம் மூழும் ஆனாலும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்கள் ஆவிகள் மனதளவில் தைரிய மூட்டும் தூண்டுதலாக இருக்கும்” என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வாக்கியங்கள் பெரும்பாலும் பிரித்தானியா நாட்டிற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறினாலும் சிந்தித்துப் பாருங்கள்.உலகின் அனைத்து இடங்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இது மிகைப்படுத்தப்பட்டது அல்ல வரலாறு நிரூபித்த உண்மை.அதேபோல் கடந்த சில காலங்களாக தமிழர் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது. அவர்களின் ஆளும் ஆற்றல் ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்தித்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.உதாரணமாக ட்ரம்ப் பதவி ஏற்ற அதே சமயம் முழு உலகத்தையும் உழுக்கும் வகையில் தமிழர்கள் ஒன்று சேர கிளர்ந்து எழுந்தார்கள். அதுவே முழு உலக அளவிலும் சாதனை படைத்து, அதிர்வை ஏற்படுத
Read More

வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்?


இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், வடமாகாணத்தில் சற்று வித்தியாசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சிங்கள தலைவர்களுக்கு இடர்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் என அவர் என்னிடம் கூறினார். அத்துடன், சமஷ்டியை முன்வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சமஷ்டி முறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறை. பல நாடுகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் முறையினைக் கொடுத்துள்ளது. தன்னாட்சியை அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதனால், அவர்களுக்கு தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகின்றது என்றேன். அதற்கு அவர், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை பிரிவினையினை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக் காட்டினார். அதற்கு, பிரிவினைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் எந்தளவிற்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றார்கள் என்பதில் தான் உள்ளது. பிரிவினைக்காக மக்கள் போராடியதன் காரணம், தமிழ் மக்களை அனைத்து விடயத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டமையினாலே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்களின் வேலைகளை நாங்களே செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு இல்லாமல், நாம் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஏதாவது வழியிருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாகாணத்திற்கு போதியளவு அதிகாரத்தினைக் கொடுத்தால், போதுமானது தானே. அதுவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு வைத்துக்கொண்டு, மாகாணத்திற்கு கொடுத்தால், இதனடிப்படையில் தான் சமஷ்டி கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றேன் என சுட்டிக் காட்டினேன். வடகிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் எதிர்க்கின்றார்கள் நீங்கள் மட்டும் ஏன் இணைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறீர்கள் என அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனது சிறுவயதில் பார்த்த போது, கிழக்கு மாகாணத்தில் 5 முதல் 10 வீதத்திற்குட்பட்ட சிங்கள மக்களே இருந்தார்கள். தற்போது பார்த்தால், கிழக்கில் 31 வீதமான சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். பாரம்பரியமாக வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தும், அந்த இடங்களில் சிங்கள மேலாதிக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, வடக்கிலும் தற்போது இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கினை பிரித்து மேலாதிக்கத்தினை உருவாக்கி, மக்களை பலவிதமான குழப்பங்கள் மற்றும் கலவரங்களின் ஊடாக அவர்களது பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி, முழுமையாக சிங்கள ஆதிக்கத்தினை உருவாக்க பார்க்கின்றார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எமது பாதுகாப்பின் நிமித்தம் வடகிழக்கினை இணைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதென்பதனை எடுத்துக் காட்டினேன். அவர் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Read More

தமிழ் மாணவர் செயற்கைகோளை தயாரித்து சாதனை

தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர். இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது. இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது. டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது. சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
Read More

தசம பாகம் கட்டாயம் கொடுக்க வேண்டுமா ?

பணமும் கத்தரும்  பணத்தை எப்படி பயன்படுதுவீர்கள்.போதகர்கள் எப்படி சபை மக்களை ஏமாற்றுகின்றார்  
Read More

இயேசுவின் மகிமை! 52 வயதில் குழந்தை பாக்கியம்!!

இயேசுவின் மகிமை! 52 வயதில் குழந்தை பாக்கியம்!!
Read More

ஜோதிட குடும்பதின் அனுபவம்

ஜோதிட குடும்பதின் அனுபவம்
Read More

தமிழ்ச் சமூகத்தின் தாயகத்தில் நீதியும் ஆற்றுதலும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தேடல்: – ஜோன் ரொறி

ரொறொன்ரோ மேயர் ஜோன்ரோறி அவர்கள் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலே இலங்கையின் வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற மேயர் ரொறன்ரோ நகரத்திலுள்ள தமிழ்ச் சமூகம் எங்கேயிருந்து வந்தார்கள்? ஏன் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதுடன் இலங்கையில்; நீதிக்கும் அமைதிக்குமான வழிவகைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

இப்பயணம் தொடர்பாக மேயர் ஜோன்ரோறி அவர்கள் எழுதிய அனுபவப் பகிர்வின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்: “ரொறொன்ரோவில் வாழுகின்ற தமிழ்ச்சமூகத்தினரை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பர். தமிழர்கள் தொழில் முனைப்புக் கொண்டு வெற்றிகரகமாகச் செயற்படுபவர்கள்> நல்ல குடிமக்கள்> சிறந்த அயலவர்கள்> நல்ல நண்பர்கள் என்பதைப் பலரும் அறிவார்கள். தமிழர்களுடைய தாய்நாட்டைப் பற்றி உங்களுக்குப் பெருமளவில் தெரியாமல் இருக்கலாம்> இலங்கையில் இருந்து வந்த தமிழர்களே பெரும்பாலும் ரொறன்ரோவில் வசிக்கிறார்கள்.

இலங்கையிலே நடைபெற்ற நீண்ட துன்பியலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது அதிலிருந்து விலகிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு இங்கு வந்தவர்களே இத்தமிழர்கள். இந்த யுத்தமானது பல தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒன்றாகும். இத்தகைய சூழலிற்தான் அண்மையிலே நான் ரொறொன்ரோ நகரத்தின் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கனடியரான நீதன் சண்> மைக்கல் தொம்சன் ஆகிய நகரசபை உறுப்பினர்களுடன் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன். ஆனால் அந்த அழகான நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் அங்கு போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் என் வடபகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டது.

யுத்தச் செயற்பாடுகள் சில வருடங்களிற்கு முன்னர் முடிவுற்றிருக்கும் நிலையில் நான் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள சமூகங்களையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியும் மன ஆற்றுகையும் அடையப்பெறுவதற்காக என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விபரமான விளக்கத்துடன் திரும்பி வந்துள்ளேன்.

வடபகுதிக்குச் செல்லும்போது உங்களுக்குத் தென்படக்கூடிய முதலாவது விடயம் யாதெனில் மிகையாகக் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னமே.

ஒரு சனநாயக நாட்டில் மக்கள் வாழும் பகுதியில் எதிர்பார்பதைவிட பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட தன்மையே அங்கு காணப்படுகின்றது. பெருமளவு இராணுவத்தளங்கள் குறிப்பிட்ட மைற்கற்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று தமிழ் குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் அங்கே இராணுவப்படை இருப்பதாகவும் தமிழ் மக்களிடமிருந்து வற்புறுத்திப் பறிக்கப்பட்ட நிலங்களில்தான் இப்படைகள் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமது தேவைகளுக்காக இராணுவம் பயன்படுத்துவதும் மக்கள் மூச்சுவிடத் திணறுகின்ற அளவுக்கு இராணுவத்தின் நடமாட்டமும் இணைந்ததான இந்தச் செயற்பாடே இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களின் நிம்மதி மிக்க வாழ்வுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கின்றது.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கொள்வதற்கு எந்தவிதமான நினைவுச்சிலைகளோ நினைவிடமோ வடமாகாணத்தில் இல்லை. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற இடமான முள்ளிவாய்க்காலிலே தமிழர் ஒரு தற்காலிக நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தி உள்ளனர். இறுதிக்கட்டதின் போது நாற்பதினாயிரம் (40>000) உயிர்கள் இழக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த நினைவிடத்திலே ஒரு சுடரை ஏற்றி மலர்கள் இட்டு ஒரு கணம் அந்த நினைவை மீட்டியது என் மனதை நெகிழச் செய்வதாக இருந்தது.

நான் அங்கிருந்த வேளையில் அமைதியான வழியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் குறிப்பிட்ட ஒரு எதிர்ப்புப்பேரணியிலே நடுத்தர வயதுள்ள பெண்கள் ஒரு குழுவாகக் காணப்பட்டனர். அவர்கள் இளம் ஆண்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் சோகம் நிறைந்திருந்தனர். அது எனது மனதை மிகவும் தொட்டதாக இருந்தது.

இந்தப்படங்கள் அவர்களின் மகன்மார் பேரன்மார்களுடையது என்பதனை நான் அவர்களுடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடைசிக் கட்டப்போரின்போது பிடித்துச் செல்லப்பட்டதாகப் பலருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காணாமல் போன இந்த ஆண்கள் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டதாகவோ அல்லது அவர்களைக் கண்டதாகவோ இதுவரை எதுவும் இல்லை.

இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு சுற்றிவளைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்பு  இப்பிள்ளைகளின் கதி என்னவாயிற்று என்பது பற்றி ஏதும் அறிய முடியவில்லை என்றால் எத்தகைய துயரம் எமக்குண்டாகும்?

இது தொடர்பாக அண்மையில் அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்திருந்தும் எல்லாமே பெருமளவில் மூடி மறைக்கப்படும் மர்மமாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து தங்களை விட அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தாய்மார்களை அவர்களின் நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள். ஒரு தாத்தாவாக, அப்பாவாக என்னை உணர்ந்து அவர்களின் வேதனையைக் அந்தக் கண்களில் கண்டேன். அவர்களின் துயரத்தை ஆழமாக விளங்கிக்கொண்டேன்.

செய்திகள் கெட்டவையாக இருப்பினும் கூட  மனம் புண்பட்டிருக்கும் இந்தத் தாய்மாருக்கும் ஒரு முடிவு தேவை. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தக் காணாமற்போன பிள்ளைகள் பற்றி அரசாங்கத்திடம் உள்ள பழைய அறிக்கைகளை வெளியிடுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் கூறுவது போன்று உண்மையிலே ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றிலே சர்வதேச சமூகம் பங்கு கொள்ளும்போதுதான் மனித உரிமை அத்து மீறல்கள்  காணாமற் போனோர், இறந்தோர் பற்றிய உண்மையான நீதியை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனபதுதான் நியாயமானதாக அமையும்.

இப்பொறுப்புக்கூறும் படிமுறையை அமைக்கும் போது சர்வதேச ரீதியில் மதிக்கக்கூடிய நீதியாளர்களை அனுமதிக்கின்ற செயலே பயனுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தவும் உண்மையான மாற்றத்தை நிகழ்த்தவும் அமைதியினைக் கொண்டுவரவும்; வல்ல நம்பிக்கையினை அளிப்பதாக அமையும்.

பொருளாதார சமூக முதலீட்டிற்கான ஒரு திட்டம் இப்பிரதேசத்திற்குப் பெருமளவில் தேவைப்படுவதாக உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான இடங்கள் போன்று முன்னேறுவதற்கான வழிகளையும் வேலை வாய்ப்புகளையும் தமிழர்கள் அடைவது என்பது தமிழ் மக்களுக்கான சமூக நீதியை அவர்கள் அடைவதற்கும் வழி வகுக்கும்.

இதற்குரிய தொடக்கத்திற்கான முனைப்பு கூடுதலாகச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தே வரவேண்டும். இருந்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரொறொன்ரொ நகரத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாம் கையெழுதிட்டுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் கல்வியிற் தொடங்கி பொருளாதார அபிவிருத்தி போன்ற எல்லா விடயங்களிலும் ஒருமித்துச் செயற்பட முடியும்.

இந்த உடன்படிக்கை போரின்போது அழிக்கப்பட்ட சரித்திர ரீதியான நூலகத்திற்கு உதவுவதையும் உள்ளிட்டதாக அமையும். இப்புரிந்துணர்வு அறிக்கையின் அடிப்படையில் நல்லெண்ணத்தினையும் கூட்டு ஒத்துழைப்பினையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளக் குறியீடாக ரொறொன்ரொ பொது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்று யாழ். பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம்.

சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணம் செய்த அனுபவம் என்பது மாறுபட்டதாக இருந்தது.

மனக்கலக்கத்தை அனுபவித்த மக்களைச் சந்தித்ததன் மூலம் எமது மனம் நெகிழ்வுற்றது. இம்மக்கள் அரசாங்கத்தினால் இதுவரை போதுமான அளவு நீதியையும் உண்மையான மன ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையையும் பெறவில்லை. பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவில் சில சிறிய படிகளை எடுத்திருப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்கான அறிகுறி தென்படுகின்றது.

தற்போதுள்ள சவால் என்பது அடுத்த கட்டமாக பெரிய படிகளை அரசாங்கம் எடுப்பது என்பதாகும். காணாமற்போன பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் உரிமையும் இத்தாய்மாருக்கு இருப்பதால் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும். அளவுக்கதிமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

காணிச் சொந்தக்காரர்களிடம் பெருமளவிலான காணியைத் திரும்பவும் கொடுத்தல்  சர்வதேச பங்களார்களின் ஈடுபாட்டுடன் என்ன நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ள ஒரு பொறுப்புக்கூறும் படிமுறையை அமைத்தல்  இப்பிரதேசத்தினதும் தமிழ் மக்களிற்கும் நம்பிக்கை உணர்வினையும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும் பொருட்டு ஒரு உண்மையான திட்டத்தினை உருவாக்குதல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இங்கே ரொறொன்ரோவில் உள்ள சமூகத்துடன் இணைந்து இவ்விடயங்கள் சாத்தியமாகும் பொருட்டு பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கின்றேன்.
Read More

டாஸ்மாக் ஷாப் மூடப்பட

டாஸ்மாக்  ஷாப் மூடப்பட ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள் . தேவன் தந்த விடுதலைகாக  ஸ்தோத்திரம் தேவன் தந்த விடுதலைகாக ஸ்தோத்திரம்
Read More

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய

தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய  அவர்கள் ஆசிர்வதிக்கபட தமிழ் நாடு விவசாயிகள் கோரிக்கை வெற்றி அடைய ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிராத்தனை செய்யுங்கள்
Read More

இலுமினாட்டிகள் பற்றி-சீமான்

யார் இந்த இலுமினாட்டிகள் இவர்கள் நிழல் இராட்ச்யம் நடத்தி ஆட்சியாளர்களை அச்சுறுத்தி வரும் சாத்தானை வழிபடும் ஒரு கொடுரமான கும்பல் பைபிளில் வரும் அந்திகிறிஸ்த்துவின் அடிமைகள் அவனுடைய ஒரு உலக  சர்வாதிகார ஆட்சிக்கு உலகத்தை ஆயுத்தபடுத்தும் சர்வதேச மகா பயங்கர வாத கும்பல்     
Read More

தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு எது தெரியுமா?

தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில் கொண்டுள்ளன. இன்று, தமிழ் எண்களின் பயன்பாட்டைப் பழைய நூல்களிலும், தமிழ் நாட்டில் உள்ள சில வண்டிகளின் பதிவு அட்டைகளிலும் காணலாம்.

ஆனால், இன்றளவும் தங்கள் நாட்டின் நாணயத் தாளில் தமிழ் எண்களை அச்சிட்டு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஒரு நாடு. உலக வரைபடத்தில் பார்க்கும் பொழுது மிகவும் சிறிய நாடாக இருந்தாலும் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது அப்பிரிக்காவின் அருகிலுள்ள குட்டி நாடான மொரீசியசு நாடு. உலகிலே இந்த நாடு மட்டும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
*தமிழ் எண்கள்*

1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo, 11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo 21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo 31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo, 41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo 51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo 61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo 71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo 81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo 91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo 101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo 111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo 121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo 131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo 141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo 151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo 161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo 171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo 181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo 191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.


Read More

உங்கள் தனிமையை மாற்றுவார் ஒரு குடும்பத்தை கட்டுவார்

உங்கள் தனிமையை மாற்றுவார்  ஒரு குடும்பத்தை கட்டுவார் 
Read More

எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன்


என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ அவர்களை தூசித்தாய் கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதை நன்மையாக மாறினேன் .உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில் நித்திய நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யேசுவே நான் உம்மை மனபூர்வமாக சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் எனக்கு கற்பியும் ஆமேன் . என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன்
Read More

சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்- துண்புறுத்தப்படும் தமிழ் பெண்கள்


சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய பாலியல் முகாம்கள்- துண்புறுத்தப்படும் தமிழ் பெண்கள்
Read More

எண்ணுவதை அடையும் இரகசியம்

ஆழ்ந்த உளவியல் ஆவணப்படம்  உங்கள் எண்ணம் போல உங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் 
Read More

யார் இந்த ஆட்டோ ராஜா?

 யார் இந்த ஆட்டோ ராஜா ?  கர்நாடக  மாநிலத்தில்  ஒரு காலத்தில் மிகவும் ரவுடியாக  வலம்  வந்து  இயேசுவை ஏற்று  கொண்டு  கர்நாடக  மாதர் தெரேசாவாக  உயர்ந்தவர்  இந்த ஆட்டோ ராஜா
Read More

ஒருவரது குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?

முதன் முறையாக ஒருவரை சந்திக்கும் போது, அவர் எப்பேற்பட்டவர் என்பதை முன்பே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். சிலர் ஒருவருடன் பேசும் முன்பே அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பார்கள். அது எப்படி என்று தெரியுமா?

அதற்கு அவர்களின் ஒருசில நடவடிக்கைகள் அல்லது செயல்கள் தான் காரணம்.

கையெழுத்து

ஒருவரின் பெர்சனாலிட்டி அவரின் கையெழுத்திலேயே தெரியும். அதுவும் அவர்கள் எழுதும் விதம் மற்றும் எழுத்துக்களின் அளவைக் கொண்டு சொல்ல முடியும் என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிறிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்களாம்.

அதுவே பெரிய கையெழுத்துக்களை கொண்டவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்களாம். மேலும் யார் ஒருவர் எழுதும் போது அதிக அழுத்தத்தைக் கொடுத்து எழுதுகிறார்களோ, அவர்கள் எதிலும் மிகுந்த அக்கறையுடனும், அழுத்தம் கொடுக்காமல் லேசாக எழுதுபவர்கள் ஒற்றுணர்வு உள்ளவர்களாகவும், மிகவும் சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பார்கள்.

நிறம்

அடிக்கடி தேர்ந்தெடுத்து அணியும் உடையின் நிறத்தைக் கொண்டும், ஒருவரைப் பற்றி சொல்ல முடியும். அதில் யார் அதிகமாக கருப்பைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மிகவும் சென்டிவ்வானவர்கள் மற்றும் எதிலும் அக்கறையுடன் செயல்படுவார்கள்.

சிவப்பு நிற உடைகளை அணிபவர்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்வார்கள் மற்றும் பிடிவாத குணமுள்ளவர்கள், எடுத்த காரியத்தை முடிப்பதில் தீர்மானமாக இருப்பார்கள். அதுவே பச்சை நிறம் விசுவாசத்தையும், பாசத்தையும் குறிக்கும். நீலம் நிலைமாறாத் தன்மை, சென்சிடிவ் மற்றும் மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.

நகங்களைக் கடிப்பது

ஒரு சூழ்நிலையைக் கையாளும் போது நம் உடல் ஒருசில செயல்களை தானாக செய்யும். அதாவது முடியை சுழற்றுவது அல்லது நகங்களைக் கடிப்பது போன்றவை. இச்செயல்களை பொறுமையின்மை, விரக்தி, சலிப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும்.

அதிலும் நகங்களைக் கடிப்பவர்கள் பரிபூரணத்துவ குணத்துடன் இருக்க விரும்புவார்கள், அதே சமயம் அதிகமாக பதற்றமாவார்கள்.

நேரந்தவறாமை

ஒருவரின் நேரந்தவறாமை குணம் அவரைப் பற்றி கணிக்க உதவும். உதாரணமாக, ஒருவரை சந்திக்க அல்லது இன்டெர்வியூவிற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றால், அது நம்மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். அதுவே தாமதமாக சென்றால், அது அவர்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

கை குலுக்குவது

ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் ஓர் முறையான கை குலுக்குவதைக் கொண்டும் அவரது குணத்தைக் கணிக்க முடியும். அதில் ஒருவர் உறுதியுடன் கைகளை இறுக்கமாக குலுக்கினால், அவர் தன்னம்பிக்கை குணமிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதைக் குறிக்கும்.

அதுவே கை குலுக்கும் போது தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், குறுக்கு வழியில் இலக்குகளை அடைவார்கள் என்பதையும் வெளிக்காட்டும்.

கண்கள்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் குணங்கள் என பல விஷயங்களைச் சொல்லும். கருப்பு நிற கண்களைக் கொண்டவர்களை விட, நீல நிற கண்கள் உள்ளவர்கள், எதையும் அவ்வளவு எதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் பெரும் குடிகார்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

அதுமட்டுமின்றி ஒருவருடன் பேசும் போது அவர்களது கண்களைப் பார்த்து பேசாமல் எங்கேயோ பார்த்து பேசினால், அது அவர்களுக்கு சுய-கட்டுப்பாடு குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்.

Read More

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


 இந்தனை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய  வேண்டும் அறிந்து கொள்ளுங்கள்
Read More

டொனால்ட் ட்ரம்புக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு புனித நகராக ஜெருசலேம் உள்ளது.
பாலஸ்தீனம் வசம் இருந்த ஜெருசலேம் கடந்த 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக உள்ள டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவேன் என கூறியிருந்தார்.
இன்றளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் மாறவில்லை, இதனை பிரான்ஸ் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன் மார்க் ஐரால்ட் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ள நிலையில், அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Read More

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு
தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், நடிகர் சங்கம், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டாலும், இளைஞர்களின் கண்ணியமான நடவடிக்கையே பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து களம் இறங்கினர். இருட்டி மெரினாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்கள், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை கொடுத்தது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இருட்டினை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பெண்களின் மீது பாய்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். பெங்களூர் மட்டுமல்ல இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
ஆனால், சென்னையில் நடைபெற்று வந்த இந்த தொடர் போராட்டத்தில், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டை விட ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் அமைதியான போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு வியப்பை அளித்துள்ளது. நான்கு இளைஞர்கள் சேர்ந்தாலே, வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவுக்கு, தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பிரமிக்க வைத்துள்ளது.
இதனை வட இந்திய பெண் ஒருவர் பாராட்டியுள்ளார், பெண்களை மதிப்பதில் சென்னை ஆண்களிடம் இருந்து டெல்லிவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென என்.டி.டி.வி எடிட்டோரியல் இயக்குநர் சோனியா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Read More

உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்

என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை  கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு  ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ  அவர்களை  தூசித்தாய்  கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி  வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு  செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு  அதை நன்மையாக மாறினேன் .உன் மீது  எனக்கு எந்த கோபமும்  இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக  நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில்  நித்திய  நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே  அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும்  யேசுவே  நான் உம்மை மனபூர்வமாக சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை  ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான்  உமக்காக  என்ன செய்ய  வேண்டும்  எனக்கு கற்பியும் ஆமேன் .
என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன் .  
Read More